உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அசோலா வளர்ப்பு பயிற்சி வகுப்பு

அசோலா வளர்ப்பு பயிற்சி வகுப்பு

ரிஷிவந்தியம்: யால் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டம் மூலம் அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது. வாணாபுரம் அடுத்த யால் கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சியாம்சுந்தர் தலைமை தாங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரி ஆனந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உதவி வேளாண்மை அலுவலர் எழிலரசி பங்கேற்று, அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார். விவசாயிகள் அடையாள அட்டை எண் பதிவு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிர் காப்பீட்டு பணியாளர் சையத்சமீர் செய்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை