உள்ளூர் செய்திகள்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க., தொகுதி தலைவர், செயலாளர், மகளிர் அணி தலைவர், செயலாளர் பொறுப்பிற்கான விருப்ப மனு பெறும் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்க ஜோதி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் அன்புமணி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மேலிட பொறுப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் பலர் மேலிடப்பார்வையாளர்களிடம் விருப்ப மனுவை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை