உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடை முற்றுகை

பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடை முற்றுகை

சங்கராபுரம்,: அரசம்பட்டு ரேஷன் கடையில் பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து பொது மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை எண்.8ல் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பாமாயில் வழங்கப்படுவதில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ரேஷன் கடை முன் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் பாமாயில் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.அரசம்பட்சடில் பொது மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ