உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலை தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்தவர் நாராயணன் மகன் செந்தில், 40; மூரார்பாளையத்தில், டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கச்சிராயபாளையத்தில் இருந்து, மாருதி ஸ்விப்ட் காரில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார். இரவு 11:40 மணியளவில் தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செந்திலை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ