உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / யு.பி.எஸ்.சி -2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

யு.பி.எஸ்.சி -2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி - 2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னை முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு ஒரு வருட காலம் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான முதல் நிலை, முதன்மை நிலை பயிற்சியினை வழங்குகிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் ஸ்கிரினிங் டெஸ்ட் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்து, முதற்கட்டமாக தகுதியுள்ள 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் வசதியும் மற்றும் பயிற்சிக்கான செலவீன தொகையும் தாட்கோவால் அளிக்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ