மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
01-Jun-2026
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கல்லுாரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருக்கோவிலுார் அடுத்த ஆவிகொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் பாக்கியலட்சுமி, 20; திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் திருக்கோவிலுாரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வீட்டின் அருகாமையில் இருந்த அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து பாக்கியலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
01-Jun-2026