உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகள் பெரியநாயகி (எ) யுவஸ்ரீ,18; பிளஸ்-2 முடித்துள்ளார். கடந்த 24ம் தேதி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மமன் கோவில் தேர் திருவிழாவிற்காக சுரேஷ் குடும்பத்தினர் ஒன்றாக சென்றனர். அங்கு யுவஸ்ரீ திடீரென காணாமல் போனார். உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் யுவஸ்ரீ கிடைக்கவில்லை.சுரேஷ் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்