மேலும் செய்திகள்
சாலை தடுப்பில் மோதி கார் தீப்பிடித்து சேதம்
02-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது விளைநிலத்தில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் புள்ளிமான் ஒன்று நேற்று காலை தவறி விழுந்தது. இந்த கிணற்றில் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், மானுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கண்ட, பொதுமக்கள் நேற்று காலை 7:15 மணியளவில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார், சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கயிறு கட்டி கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிய மானை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, இந்திலி வனச்சரக அலுவலகத்தில் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
02-Mar-2025