உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முக்கனுர் காலனி வரை அரசு பஸ் வசதி நீட்டிப்பு

முக்கனுர் காலனி வரை அரசு பஸ் வசதி நீட்டிப்பு

சங்கராபுரம், ; சங்கராபுரம் அடுத்த முக்கனுர் காலனிக்கு அரசு டவுன் பஸ் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.சங்கராபுரம் அடுத்த முக்கனுர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள காலனி பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதனையேற்று தற்போது, முக்கனுர் காலனி வரை, அரசு பஸ் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.துணை மேலாளர் அறிவண்ணல், போக்குவரத்து கழக கிளை மேலாளர் மணி, ஊராட்சி தலைவர் ஜெயகுமார், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !