உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பெண்கள் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா

அரசு பெண்கள் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, இன்னர்வில் கிளப் தலைவி சுபாஷினி தலைமை தாங்கினார். செயலாளர் உஷாதேவி வரவேற்றார்.கலையரங்கத்தை இன்னர்வீல் மாவட்ட ஆளுனர் செல்வி மற்றும் முன்னாள் தலைவி கலாவதி ஆகியோர் திறந்து வைத்தனர்.பின், சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் நடந்த ஆளுனர் வருகை விழாவில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் கமலாவதி, தீபா, அகல்யா, சுபாஷினி, உமாமகேஸ்வரி, கவுரி, பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை