உள்ளூர் செய்திகள்

உலக மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. கள்ளக்குறிச்சி வாசவி பவனத்தில் நடந்த நிகழ்சிக்கு பெரியம்மாள் தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, மனவளக்கலை மன்ற பேராசிரியர் சுதா குமரேசன் முன்னிலை வகித்தனர். மனோஸ்ரீ, சோதியம்மாள், சாந்தி, செல்வராணி, பழனியம்மாள், பாக்கியம் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். வள்ளியம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை