சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் கடத்தியவர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அடுத்த தெங்கியநத்தம் சேர்ந்த நாராயணன் மகன் பெரியசாமி,44; இவர் மீது கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தடுப்பு காவலில் கைது செய்ய எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து,கலெக்டர் பிரசாந்த், சாராயம் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெரியசாமியை தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ள பெரியசாமியிடம் தடுப்பு காவலில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.