உள்ளூர் செய்திகள்

மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை : மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கங்கை அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்களின் மகா கும்பாபிேஷகம் நடந்தது.இதற்கான விழா 12ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, வர்ண பூஜை, ஸ்ரீ சந்திர பூஜை, 4ம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தண்டாயுதபாணி கோவில், மாரியம்மன் கோவில், கங்கை அம்மன் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை