மேலும் செய்திகள்
சாலையோரம் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
27-Apr-2026
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகளில் படிந்து கிடக்கும் மணல் குவியல்களால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். கள்ளக்குறிச்சியில் முக்கிய சாலைகளான சேலம் – சென்னை ஆகிய இரு சாலைகளின் ஓரங்களிலும் மண் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது. சாலையை மறைத்தபடி படிந்து கிடக்கும் மண் குவியல்களை கடந்து இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து பைக்கில் செல்வோர், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மண்ணில் சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் குவிந்து கிடக்கும் மண் குவியல்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27-Apr-2026