உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி கீழ் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் கூத்தக்குடி அருகே நேற்று காலை 9.30 மணியளவில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதன்பேரில் காலை 10 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை