உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் எரிப்பு போலீஸ் விசாரணை

பைக் எரிப்பு போலீஸ் விசாரணை

ரிஷிவந்தியம்: அரியலுாரில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாணாபுரம் அடுத்த அரியலுாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜா,39; இவர் கடந்த, 2ம் தேதி இரவு 11:00 மணியளவில் தனது பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு, துாங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, 'பைக்' எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக பைக் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். மர்மநபர்கள் சிலர், திட்டமிட்டு அவரது பைக்கை எரித்ததாக புகார் அளித்தார். அதன்பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ