மேலும் செய்திகள்
மடுவங்கரை ஊராட்சியில் மருத்துவ முகாம்
15-Sep-2024
கச்சிராயபாளையம், : கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் அரசு தொடக்கப் பள்ளியில் பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் உமாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுமதி கோவிந்தன், துணை தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார்.முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை, சளி, காச நோய், எச்.ஐ.வி., பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் காந்திமதி, ஜெகதீஸ்வரன், சிவபிரசாத், ஜெனிபர், ராகுல் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, பல் போன்றவற்றிற்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தனர்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுகாதார ஆய்வாளர் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
15-Sep-2024