மேலும் செய்திகள்
காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
07-Mar-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில், ஏழை பெண் குழந்தைகளுக்கு தபால் நிலைய சேமிப்பு கணக்கு துவக்க விழா நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரோட்டரி மாவட்ட ஆளுனர் செந்தில்குமார், மண்டல துணை ஆளுனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி பேசினார். அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 101 ஏழை பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.250 மதிப்பில் சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டன.நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் பெருமாள், முத்துசாமி, ரவி, ராமலிங்கம், சஞ்சீவ்குமார், ராஜேந்திரன், இமானுவேல் சசிக்குமார், சிவக்குமார். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொருளாளர் பாபு நன்றி கூறினார்.
07-Mar-2025