உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சியில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று சிவபெருமானுக்கு உகந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பன்னிரு சைவத் திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதிலுள்ள 658 பாடல்களை கோவிலின் ஓதுவார்கள் நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தொடர்ந்து படித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பிற்பகல் 3:00 மணிக்கு கோவில் புதுப்பிக்கும் திருப்பணி மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ