உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வராஹி கோவிலில் சிறப்பு பூஜை 

வராஹி கோவிலில் சிறப்பு பூஜை 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் வராஹி அம்மனுக்கு நடந்த பஞ்சமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகில் பஞ்ச முக மஞ்சள் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு உலக நன்மைக்காக பஞ்சமி திதி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதையொட்டி, வராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, விநாயகர், முருகன், நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர். மேலும் ஜல வராஹி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை