கல்வி உதவி தொகை வழங்க ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்து. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், இதுவரை கல்வி உதவித் தொகை பெறாமல் நிலுவையிலுள்ள மாணவர்கள், பள்ளிகள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.மாவட்டத்தில், 9 வட்டாரங்களில், தலா 2 முகாம்கள் என 18 முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்குகள் அஞ்சலகத்தில் துவங்கவும், கூடுதல் முகாம் நடத்தி புதிய வங்கி கணக்குகள் தொடங்கி விரைவாக கல்வி உதவித் தொகை வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.