மேலும் செய்திகள்
வீட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது
08-Aug-2024
கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலபந்தல் மற்றும் மாடாம்பூண்டி பகுதியில் வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பாலபந்தல் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை 7 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வீட்டில் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்த திருப்பாலபந்தல் சேர்ந்த கணேசன்,55; மாடாம்பூண்டி பாண்டுரங்கன் மனைவி முனியம்மாள்,72; ஆகியோரை போலீசார் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.
08-Aug-2024