காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுமா?
சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது. வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கராபுரம் காவல் நிலைய எல்லையில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் விபத்து, சாராயம்மற்றும் மது பாட்டில் கடத்தல் போன்றவற்றில் பறிமுதல் செய்யப்படும் இரு சக்கர வாகனங்களை போலீசார் மீட்டு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.இது போல் மாதம்தோறும் பல்வேறு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.இதில் உரிய ஆவணங்கள் உள்ள வாகனங்களை மட்டும் உரிமையாளர்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்களை எடுக்க அதன் உரிமையாளர்கள் வருவதில்லை.இதேபோல், உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தில் பல ஆண்டுகளாக மக்கி வீணாகிறது.எனவே, சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுத்து சென்று முறைப்படி ஏலம் விட எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.