கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்தும், இளநிலை ஆய்வாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் 4 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளநிலை வருவாய் அலுவலராக உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயலட்சுமி, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்வர்ணலதா, வி.ஏ.ஓ.,க்களாக சிறுவங்கூரில் பணிபுரியும் எழிலன், பொரசக்குறிச்சியில் பணிபுரியும் அம்பிகா ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.மேலும், கள்ளக்குறிச்சி பறக்கும்படை தனி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த அண்ணாமலை, கள்ளக்குறிச்சி குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், முதுநிலை வருவாய் அலுவலர்களாக உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த அப்துல்கனி, செங்குறிச்சி குறுவட்ட ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன், ஆறுமுகம் முறையே வடபொன்பரப்பி மற்றும் குலதீபமங்கலம் குறுவட்ட ஆய்வாளராகவும், வனநிர்ணய அலுவலகத்தில் பணிபுரிந்த பெரியசாமி, வெள்ளிமலை குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டம் முழுதும் 21 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.