உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 25 டாஸ்மாக் கடைகள் மூடல்

25 டாஸ்மாக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 25 டாஸ்மாக் கடைகளை இன்று மூட கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 86 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை கிராமத்தில் பா.ம.க., சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் பஸ், வேன், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வழியாக செல்வர். இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள, 25 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட வேண்டும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை