தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு கருகி சேதம்
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு பயிர் கருகி சேதமானது.சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாளையில் பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவருக்கு அப்பகுதியில் சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று கரும்பு தோட்டம் திடீரென தீ பிடித்து எரிந்தது.காற்று வீசியதால், அருகில் இருந்த பலராமன் மனைவி பிரியா என்பவரது கூரை வீடும் தீ பிடித்து எரிந்தது.சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கரும்பு தோட்டம் மற்றும் கூரை வீட்டின் தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், 3 ஏக்கர் கரும்பு கருகி சேதமடைந்தது. மேலும் கூரை வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.தீ விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.