உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டு சுவர் இடிந்து 3 பேர் காயம்

வீட்டு சுவர் இடிந்து 3 பேர் காயம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து, 3 பேர் காயமடைந்தனர். உளுந்துார்பேட்டை தாலுகா, கெடிலம் அடுத்த செஞ்சிகுப்பம் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படுகிறது. தற்போது அதற்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன.இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் பிரபு என்பவரின் வீட்டின் மேல் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில், பிரபு, 45; பிரசாந்த்,48; ராஜேஷ், 43; ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை