உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது; திருநாவலுார் போலீசார் அதிரடி

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது; திருநாவலுார் போலீசார் அதிரடி

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் கிராமத்தில் வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், உளுந்துார்பேட்டை எம். குன்னத்துார் பகுதியைச் சேர்ந்த கலைமணி மகன் திவாகர், 19; ஸ்ரீரங்கன் மகன் வெற்றிவேல், 24; அன்பழகன் மகன் வெங்கடேசன், 24; விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் முருகதாஸ், 25, ஆகியோர் என, தெரியவந்தது. இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ