மேலும் செய்திகள்
வேளாண் காடுகள் விழிப்புணர்வு முகாம்
22-Mar-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே, பழையனுாரில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு வேளாண்துறை சார்பில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது.வேளாண் அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் வினோத், பட்டு வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர். தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் லோகப்பிரியா, தனலட்சுமி, அருண்குமார் மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி, வேளாண் பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வேம்பு, தென்னை, கொய்யா, மா என மொத்தம் 50 மரக்கன்றுகள் கிராமத்தில் நட்டனர்.
22-Mar-2025