உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 70 பேர் கைது

கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 70 பேர் கைது

கள்ளக்குறிச்சி : டாஸ்மாக் ஊழலை கண்டித்து, கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழக அரசின் டாஸ்மாக் துறையில் 1000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஊழலை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் கச்சேரி சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பா.ஜ., தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், டாஸ்மாக் ஊழலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், மகேந்திரன், துரை, வில்சன் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !