மேலும் செய்திகள்
ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை
17-Aug-2025
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே வீட்டில் படுத்து துாங்கிய பெண்ணிடம் கம்மல், தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி பூங்கோதை, 60; இவர் நேற்று முன்தினம் இரவு புழுக்கம் அதிகமாக இருந்ததால், வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு துாங்கினார். பூங்கோதை ஒரு அறையிலும், அவரது கணவர் பாலசுப்ரமணியன் ஒரு அறையிலும் படுத்திருந்தனர். நள்ளிரவு 2:00 மணிக்கு முகத்தை சிவப்பு துணியால் மூடிய மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து, துாங்கிக்கொண்டிருந்த பூங்கோதையின் காதில் இருந்த 2 கிராம் தங்க கம்மல் மற்றும் 4 கிராம் தாலி செயினை பறித்தார். மர்ம நபர் செயின் பறிப்பை அறிந்து எழுந்த பூங்கோதை சத்தம் எழுப்பினார். கணவர் பாலசுப்ரமணியன் எழுந்து வருவதை கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தார். இது குறித்து பாலசுப்ரமணியன அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து வீட்டிற்குள் புகுந்து பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
17-Aug-2025