உள்ளூர் செய்திகள்

ஆதார் மெகா மேளா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 4 நாட்கள் ஆதார் மெகா மேளா நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:ஆதார் சேவைகளை பெறுவதற்காக ஏராளமானோர் தினமும் கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வருகின்றனர். இதனால் அஞ்சல் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றமடைகின்றனர்.இதையொட்டி, அஞ்சல் துறை சார்பில் கள்ளக்குறிச்சி ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆதார் மெகா மேளா நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு கணினிகள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் 4 நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆதார் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ