மேலும் செய்திகள்
டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்பு
17-May-2025
கள்ளக்குறிச்சி: அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலர்கள் புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழியை ஏற்றனர். கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் வரவேற்றார்.வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு, புகையிலை மற்றும் நிக்கோடின் பொருட்கள் ஏற்படுத்தும் சுகாதார சீர்கேடுகள், சிகரெட், பீடி, சுருட்டு, பான்பராக், ஹான்ஸ், குட்கா புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் வியாதிகள் குறித்து அறிவுறுத்தினர்.மேலும் கல்வி நிலையங்களுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கக் கூடாது எனவும், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்றால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் எனவும், விளக்கினர். தொடர்ந்து புகையிலை தீமை குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். செவிலியர்கள் கிருஷ்ணவேணி, விஜயராணி, மருந்தாளுனர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பாலா நன்றி கூறினார்.
17-May-2025