உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாத்துாரில் மக்காசோளம் வயல்கள் வேளாண்மை துறையினர் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி

 மாத்துாரில் மக்காசோளம் வயல்கள் வேளாண்மை துறையினர் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி

கள்ளக்குறிச்சி: தினமலர் செய்தி எதிரொலியால் மாத்துார் பகுதியில் மக்காசோளம் வயலில் படைப்புழு பாதிப்பு தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைக்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காசோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாத்துார் கிராமத்தில் 320 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 179 ஹெக்டேர் பரப்பளவு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. 141 ஹெக்டேர் பரப்பளவு ஒன்று முதல் மூன்று மாத வளர்ச்சி நிலையில்உள்ளது. இந்நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்காசோளம் வயல்களில் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுராசன் தலைமையில் வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் மாத்துார் பகுதியில் படைப்புழு தாக்குதலுக்கான மக்காசோளம் பயிர் வயல்களை பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். அதில், மக்காசோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் அதை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி