அ.தி.மு.க., ஜெ., பேரவை துண்டு பிரசுரம் வழங்கல்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி பேரவை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். நகர செயலாளர் நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு இறந்தேவன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் மோகன் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜெ., பேரவை இணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் சன்னியாசி, மருத்துவ அணி இணை செயலாளர் பொன்னரசு.மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட துணைச் செயலாளர் உமா ஜெயவேல், முன்னாள் சேர்மன் ராஜசேககர், எம்.ஜி.ஆர்., மன்றம் தங்க பாண்டியன், விவசாய பிரிவு பாண்டியன்.வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், கலைபிரிவு பவுல்ராஜ், குசேலன், கோவிந்தசாமி, வழக்கறிஞர் தாமரைச்செல்வன், கதிரவன், கார்த்திகேயன், திருமால், சங்கராபுரம் பேருராட்சி நிர்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந்தியம் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.