உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்னாள் மாணவிகள் சந்திப்பு

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2008ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற ஆங்கில பாடப்பிரிவு முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் தலைமை ஆசிரியை சுதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வினோபா வரவேற்றார். துணைத் தலைவர் வாசுதேவன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வி முன்னிலை வகித்தனர். பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள் ராஜா, ஆறுமுகம், மனோன்மணி, ராஜலட்சுமி, தற்போதும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கோதை ஆகியோருக்கு முன்னாள் மாணவிகள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்து பெற்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம் பள்ளி பருவ நிகழ்வுகள் குறித்தும், தங்கள் வாழ்வின் வெற்றிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு பற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ரேவதி உள்ளிட்ட முன்னாள் மாணவிகள் பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவி சுகன்யா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ