உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்

கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அருகே செங்குறிச்சி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதையொட்டி, கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதத்தில் இருந்து நடப்பாண்டு பிப்.,12ம் தேதி வரை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்து பேனர் வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கடந்த 5 மாதங்களில் 50 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு பணிகள் நடந்ததாக, ஊராட்சி செயலாளர் ஆனந்தன் தெரிவித்தார். உடன், அங்கிருந்த பொதுமக்கள் ஊராட்சியில் சரியாக பணிகள் நடக்கவில்லை எனக்கூறி, சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை