அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் குப்புசாமி, உதவி பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளின் படைப்பாற்றல், கலை நயம், அறிவாற்றல் மற்றும் பல்துறை திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில், இலக்கியம், இசை, நடனம், நாடகம், கலை, தொழில்நுட்பம், இயற்கை என 7 பிரிவுகளின் கீழ், 32 துணை கலை போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 16 போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். பேராசிரியர்கள் சீனிவாசன், ஜெகநாதன், முகேஷ்பிள்ளை, கரிமுன்னிஷா, மாரிசெல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மீதமுள்ள 16 போட்டிகள் வரும் அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது.