உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி  

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி  

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் மனைவி ஷர்மிளா, 33; கணவன், மனைவி இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், ஷர்மிளாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஷர்மிளா மற்றும் இவரது குழந்தைகள் கூச்சலிட்டனர். உடன், செயின் பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து அகஸ்டின் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை