மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி
22-Jul-2025
சங்கராபுரம் : அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காஸ் சிலிண்டர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் சுதர்சன் இண்டேன் காஸ் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நுகர்வோர் சங்க தலைவர் மணி, பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தார். சுதர்சன் கேஸ் நிறுவன மேலாளர் பிரபாகரன் கலந்துகொண்டு காஸ் சிலிண்டரை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தார். முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்துகொண்டனர். காஸ் நிறுவன காசாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.
22-Jul-2025