மேலும் செய்திகள்
அன்புமணி பிறந்த நாள் விழா: மருத்துவ முகாம்
10-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கிழக்கு ஒன்றிய பா.ம.க., சார்பில் கட்சித் தலைவர் அன்புமணி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேங்கூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு,ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட தலைவர் ராஜ்குமார் கட்சிக் கொடியேற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.விழுப்புரம் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் சரவணகுமார், திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் சங்க செயலாளர் ஸ்ரீதர், கிளைக் கழக நிர்வாகிகள் முனியன், பவுன், தாஸ், பாண்டியன், ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10-Oct-2024