உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் :அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி வாக்குறுதி

அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் :அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி வாக்குறுதி

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி நேற்று முகையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசங்குப்பம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், கல்லந்தல், அருணாபுரம், தண்டரை, ஒட்டம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடந்து சென்று ஓட்டு சேகரித்தார். அப்பொழுது வேட்பாளர் பழனிச்சாமி பேசியதாவது. ஒவ்வொரு கிராமத்திலும் முக்கிய தேவையாக இருக்கும் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். அம்மா இல்ல திட்டம் மூலம் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும். ஏழை மக்களுக்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கப்படும். மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில் 7.5 ஆக உள்ளதை, பத்து சதவீதமாக உயர்த்தவும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும், ஏழை எளிய மக்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பட்டு வேஷ்டி சட்டை வழங்கவும் வாக்குறுதி வழங்கி இருக்கும் பொதுச் செயலாளர் பழனிசாமியின் அறிவிப்புகள் அனைத்தும், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன். இவ்வாறு அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி பேசினார். நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !