பைக் மாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தலை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கணேசன்,60; இவர் கடந்த 14ம் தேதி இரவு 8 மணியளவில் தனது மொபட்டை கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி அருகே நிறுத்திவிட்டு காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது பைக் திருடு போன தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.