உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் பைக் ரேஸ்; பொதுமக்கள் திக். திக்..

மூங்கில்துறைப்பட்டில் பைக் ரேஸ்; பொதுமக்கள் திக். திக்..

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் நடக்கும் பைக் ரேஸ்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்கிறது. இதனை சில இளைஞர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் பைக் ரேஸ்களில் ஈடுபடுகின்றனர். அதிக சத்தம் எழுப்பியபடி, அதிவேகமாக செல்லும் பைக்குகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பைக் ரேஸ் இளைஞர்களின் அடாவடி தொடர்கிறது. அதிவேகமாக ஓட்டிச் செல்லும் பைக்குகள் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, பைக் ரேஸ் இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை