உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் பா.ஜ., ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டில் பா.ஜ., ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு: சிந்துார் ஆப்பரேஷன் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.பகல்ஹாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் திறமையாக பதில் தாக்குதல் அளித்து சிந்துார் ஆப்பரேஷன் மூலம் பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக மூங்கில்துறைப்பட்டு பா.ஜ., ஒன்றிய தலைவர் மதியழகன் தலைமையில் தேசிய கொடியை ஏந்தியபடி மூங்கில்துறைப்பட்டில் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர்.ஊர்வலத்தில், ஒன்றிய பொதுச் செயலாளர் அறிவழகன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் ராமன், செயலாளர் சின்னா, ஏழுமலை, அன்பு, தேவி, பாரதிதாசன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சவுந்தர்யா, சந்திரலேகா மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை