உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஊர்வலம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், காந்தி சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.தேசிய பொதுக்குழு உறுப்பினர் சம்பத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் பத்ரிநாராயணன், நிர்வாகிகள் புவனேஸ்வரி, பரணி, பத்மா, ஏழுமலை, அழகேசன் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய சாலை வழியாக சென்று, காந்தி சிலையில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை