உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் முற்றுகை

வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் முற்றுகை

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மேல் சிறுவலுாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவலூரிலிருந்து தானிபாடிச் செல்லும் சாலையில், சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு பின்புறம் உள்ள விவசாய நிலத்திற்கு செல்ல முடியாததால், விவசாய நில உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அகற்ற, வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி., உள்ளிட்ட வாகனங்களுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறும் இடத்திற்கு நேற்று வந்தனர்.இடத்தை அளவிடு செய்து வரைபடம் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தனர். வீடுகள் பட்டா நிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்ற முடியாது என்றும், விவசாய நிலத்திற்கு வேறு வழியை பயன்படுத்துங்கள் என தாசில்தார் வெங்கடேசன் கூறி புறப்பட்டு சென்றனார்.இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் செல்ல கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை