உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல் 

ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல் 

கள்ளக்குறிச்சி : கல்லை புத்தகத் திருவிழாவின் முதல் நாளில் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 594க்கு புத்தகங்கள் விற்பனையானது என, கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கல்வராயன்மலையின் பாரம்பரிய இசை முழக்கம், கலைப் பண்பாட்டுத் துறையின் பரதநாட்டியம், கும்மி கோலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சொற்பொழிவு நடந்தது.பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !