உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

 ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த வடகரைதாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மகன் சுஜித், 11; ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது தம்பி யோகேஷ் மற்றும் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் உள்ள ஏரியில் குளித்தார். அப்போது சுஜித் நீரில் மூழ்கினார். உடன், அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சிறுவனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சுஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ