உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சோழம்பட்டில் தாய்ப்பால் வார விழா

சோழம்பட்டில் தாய்ப்பால் வார விழா

சங்கராபுரம்; சோழம்பட்டில் ரோட்டரி கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி கிளப் தலைவர் மணிவண்ணன், இன்னர் வீல் கிளப் தலைவி இந்துமதி தலைமை தாங்கினார். துணை ஆளுநர் சுரேஷ், இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெயசக்தி, பொருளாளர் கலைவாணி முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். ரோட்டரி கிளப் மாவட்ட சேர்மன் ரேவதி, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினர். முகாமில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ஜெயசித்ரா டேவிட், ரோட்டரி மற்றும் இன்னர் வீல் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுதாகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை